திருட வந்த இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு மொபைல் போனை விட்டுச் சென்ற திருடன். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 8 October 2022

திருட வந்த இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு மொபைல் போனை விட்டுச் சென்ற திருடன்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் சித்திரவேல் வயசு 36. இவர் நேற்று முன்தினம் வேலை நேரம் முடிந்து இரவில் ஓட்டலை பூட்டி விட்டு சென்றார் சிறிது நேரத்தில் கடையில் உள்ளே இருந்து சத்தம் வருவது கேட்டு அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்தபோது கடைக்குள் இருந்த ஒருவர் எட்டு குவித்து செல்வது தெரியவந்தது.


இதனை அறிந்த பொதுமக்கள் சித்திரவேலுக்கு தகவல் தர நேரில் வந்த அவர் கடையை திறந்து கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி சி டிவியை பார்த்தார் அதில் வாயில் டார்ச் லைட் வைத்தவாறு உள்ளே நுழைந்த திருடன் ஒருவன். பொருட்களை நோட்டமிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த பணம் 20 ஆயிரத்து திருடியது தெரியவந்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலரையும் திருடன் முயற்சி செய்துள்ளான் கல்லாப்பெட்டி அருகே திருடன் தனது மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளான் பொதுமக்கள் வரும் சத்தம் கேட்டதும் சார்ஜ் போட்ட போனை மறந்து போனை விட்டு விட்டு சென்று விட்டான் இதைக் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து  வருகிறார்கள்.


 - தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad