நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளபாளையத்தில் ஞாயிறன்று ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 10 October 2022

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளபாளையத்தில் ஞாயிறன்று ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய குழு சார்பில், காவேரி ஆர் எஸ் பகுதியில் துவங்கி பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. 


இந்த ஆட்டோ பிரச்சாரத்தில், பள்ளிபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கடந்த 11.11.2020 ஆம் ஆண்டு உரிமையாளர் சங்கத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, 2021,2022 ஆம் ஆண்டு 9:50 சதம் தீபாவளி போனஸை விசைத்தறி  உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்கு முன்பே வழங்கிடவும், விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தம் 15.3.2021 ல் காலாவதியாகி நிலையில் ஒப்பந்தம் முடிந்து 19 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. 


எனவே விசைத்தறி நிர்வாகங்கள் உடனடியாக விசைத்தறி தொழிலாளருக்கு 75 சத கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் தீர்வு காணவும், தமிழக அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தியும் ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. ஆட்டோ பிரச்சாரத்திற்கு விசைத்தறி தொழிலாளர் சங்க பள்ளிபாளையம் ஒன்றிய தலைவர் A.அசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன் சிறப்புரை ஆற்றினார். மேலும் 22 இடங்களில் ஆட்டோ பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. கே.குமார், முருகேசன், அண்ணாதுரை, அருள், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad