ஆக்கிரமிப்புகள் அகற்ற அலட்சியம்; காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 October 2022

ஆக்கிரமிப்புகள் அகற்ற அலட்சியம்; காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு.

பள்ளிபாளையம் வடிகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டு ஒரு ஆண்டாகியும் அதிகாரிகள் அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.


பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இரவு முதல் கன மழை பெய்து . மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது பல குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சென்றதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் இந்த பாதிப்புக்கு மலை தண்ணீர் செல்லும் படிகால் பகுதியில் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் வரை பிரதான வடிகால் சாலையின் இருபுரத்திலும் செல்கிறது. 


இதில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இது குறுகிய வாடிக்களாக மாறிவிட்டது. பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகே இரண்டு பிரதான ஓடை சென்றது அப்பகுதிக்கு பெயரே ஓடைப்பகுதி சுற்று வட்டாரத்தில் மழை பெய்தால் இதில்  தான் தண்ணீர் செல்லும் ஆனால் இந்த இரண்டு நீர் வழித்தடமும் சில ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது ஓட இருக்கும் இடமே தெரியவில்லை.


அப்போது கலெக்டர் ஸ்ரேயா சிங்.  இந்தப் பகுதியில் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அவர் உத்தரவிட்டு நூறு ஆண்டுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர் மழை பெய்தால் மீண்டும் பாதிப்பு ஏற்படும் ஆகையால் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


-தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad