விசிக தலைவர் திருமாவளவன் குறித்த முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபர் கைது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 October 2022

விசிக தலைவர் திருமாவளவன் குறித்த முகநூலில் அவதூறாக பதிவிட்ட நபர் கைது.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்த முகநூலில் அவதூறாக பதிவிட்ட  விஷ்வ ஹிந்து பரிசத் முன்னாள் சேலம் கோட்ட நிர்வாகியை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் தமிழ்நாடு விஷ்வ ஹிந்த  பரிசத்தின் முன்னாள் சேலம் கோட்ட செயலாளரான., இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து அவதூராகவும், அவரை  கேலி செய்யும் விதமாகவும் பதிவிட்டு அதனை பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த பள்ளிபாளையம் போலீசார் இன்று காலை சபரிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டார். 


விசாரணையில் சபரிநாதன் முகநூலில் பதிவிட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த பள்ளிபாளையம் போலீசார் சபரிநாதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


- தமிழக குரல் செய்தியாளர் நாமக்கல் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad