அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங். ஆய்வு செய்தார் - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 October 2022

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங். ஆய்வு செய்தார்

குமராபாளையத்தில் நேற்றைய தினம் 7.5 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்தது இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிக அளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது மழைநீர் காரணமாக பள்ளியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்.நேரில் சென்று பார்வையிட்டார்.  

பள்ளியின் பல்வேறு பகுதியில் சென்று பார்வையிட்டு பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை குழாய் பதித்த அதன் மூலம் அருகில் உள்ள ஓடையில் விரைந்து வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். ஓடையின் ஆழத்தை கூடுதலாகவும் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அருகில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார் 


மேலும் ஓலப்பாளையம் பகுதி கத்தேரியில் மழையின் காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால் அப்பகுதியில் உள்ள வாய்க்கால்களில் வெளியேறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றுமாறு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஏறி நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன அவர்களை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad