திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 October 2022

திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம்.

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் அவர்கள். திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.


திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர். E.R. ஈஸ்வரன் திமுக மாவட்ட செயலாளர் மதராஸ் செந்தில் தலைமையில் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.வே காமராஜ். அவர்கள் பேசுகையில் திருச்செங்கோடு நகரம் 27 வது வார்டு நரிப்பள்ளம் பகுதியில் உள்ள மண் சாலை தார் சாலையாக மாற்ற வேண்டும் ஆக்கிர மிக்கப்பட்ட சாலையை கைய படுத்த வேண்டும். சித்தாலந்தூர் ஆதிதிராவிடர் பகுதியில் நூலகம் மற்றும் சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் பெருமாளையும் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திருச்செங்கோடு நகரில் உள்ள மசூதி சர்ச் கட்டிட வேலைகள் நீதிமன்ற வழக்கினால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன அவற்றில் சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டு சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். திருச்செங்கோடு 31 வது வார்டு கொல்லப்பட்டி ஹவுஸிங் போர்டு காலனியில் நூலகம் அமைக்க வேண்டும் பள்ளிபாளையம் பகுதியில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவைகள் 40 பேர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல காலமாக போராடி வருகின்றனர் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.


திருச்செங்கோடு நகர பகுதியில் உள்ள பள்ளிகளின் அருகில் உள்ள மது கடைகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும். சின்ன தம்பியம்பாளையம் தலித் மக்கள் வாழும் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.


இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.


-தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad