அதிமுக சாதனைகளை நேரில் விவாதிக்க தயார், திமுக எம்பி சவாலை ஏற்றார் மாஜி தங்கமணி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 October 2022

அதிமுக சாதனைகளை நேரில் விவாதிக்க தயார், திமுக எம்பி சவாலை ஏற்றார் மாஜி தங்கமணி.

அதிமுக அரசு பத்தாண்டு காலத்தில் செய்த சாதனைகளை ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று முன்னால் அமைச்சர் தங்கமணி பேசினார். 

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது நகரச் செயலாளரும் முன்னாள் நகர செயலாளர் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பாஸ்கர் தலைமை வகித்தார் எம் எல் ஏ சேகர் முன்னிலை வகித்தார் இதில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தங்கமணி பேசியதாவது.

அதிமுகவில் சிறு தொழில் ஏற்பட்டுள்ளது திமுகவுடன் கைகோர்த்து கொண்டு அதிமுகவை ஒழித்து விட்டால் நம் மீது வழக்கு வராது என திமுகவின் பி அணியாக செயல்படுகின்றனர் உழைத்தவர்களுக்கு நிச்சயமாக பலம் இருக்கிறது என்று சொன்னால் அது  அதிமுகவில் மட்டும்தான் நாமக்கல்லில் நடந்த போராட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் எம் ஆன ராஜேஷ்குமார் . இந்திபற்றி பேசாமல் பேசாமல் பத்து ஆண்டில் ஜெயலலிதா. பழனிச்சாமி ஆட்சியில் எதையும் செய்யவில்லை நாங்கள் ஒன்றை ஆண்டில் நிறைய செய்துள்ளோம். தங்கமணி என்ன செய்தார் என்று பேசி சவால் விட்டு உள்ளார்.

நான் சவாலை ஏற்றுக் கொள்கிறேன். நான்கு நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் முன்னணியில் ஒரே மேடையில் நான் அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன் பத்து ஆண்டுகளில் நான் செய்த சாதனையை சொல்கிறேன் இந்த ஒன்றை ஆண்டில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்ல வேண்டும் சட்டசபை முடிந்ததும் எந்த இடம் எப்போது என்று சொன்னால் நான் தயாராக இருக்கிறேன். அதிமுகவினர் பயந்தவர்கள் அல்ல முன்னாள் அமைச்சர் சரோஜா இல்லாமல் ஆய்வுக்கூடம் நடத்தியது நிரூபிக்க வேண்டும் இல்லையென்றால் அப்படியே  மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். நாங்கள் காலங்காலமாக அதிமுகவுக்கு வந்தவர்கள் வியாபாரிகள் அல்ல இவ்வாறு அவர் பேசினார்.


 - நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. No comments:

Post a Comment

Post Top Ad