பள்ளக்கா பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர் குடியிருப்பை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 18 October 2022

பள்ளக்கா பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர் குடியிருப்பை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளக்கா பாளையம். ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர் குடியிருப்பு கூட்டரங்கு நூலகம் கணினி ஆய்வு மையம் ஆரோக்கிய மருத்துவ மையம் உள்ளிட்டவற்றை மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா. சுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு. குத்துவிளக்கு ஏற்றி. திறந்து வைத்தார்.

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகப்பேறு மருத்துவமனை மற்றும் தற்போது இயங்கி வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிப்பது தொடர்பாகவும் நகராட்சி பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பயனற்ற நிலையில் உள்ள 6.  கட்டிடங்களை ஒப்படைக்கவும் மனு அளித்துள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி கூறினார்.


இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு மதிவேந்தன் அவர்கள். மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ் பள்ளிபாளையம் நகரமன்ற தலைவர் செல்வராஜ். மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad