காவிரி வெள்ளம் பாதிக்கப்பட்ட கரையோர பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 17 October 2022

காவிரி வெள்ளம் பாதிக்கப்பட்ட கரையோர பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையானது அதன் முழு கொள்ளளவான 120 அடியை  எட்டியதை அடுத்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி நீரானது நேரடியாக 16 கண் பாலம் வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு தமிழகமெங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இன்று குமாரபாளையம்  காவிரி வெள்ளம் பாதிக்கப்பட்ட கரையோர பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.


பின்னர் அவரை கூறியதாவது, தற்போது 1லட்சத்து 95ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளி ஏறி வருவதால் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் கரையோர பகுதிகளில் உள்ள மக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் மீட்டு குமாரபாளையத்தில் மூன்று முகாம்களில் 147 குடும்பங்களை சேர்ந்தவர்களும், பள்ளிபாளையத்தில் இரண்டு முகாம்களில் 75 குடும்பங்களை சேர்ந்தவர்களும்  என மொத்தம் 222குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் 115 குழந்தைகள் என  600க்கும் மேற்பட்ட நபர்களை ஐந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை அரசு செய்து வருகிறது.


மேலும் வெள்ள சேதம்  ஏற்படும் நிலையில் இருக்கும் வீடுகளில் உள்ள நபர்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர், இந்த ஆண்டே 3 மாத காலத்திற்குள் நான்காவது முறையாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளின் சுவர்கள் வழு இழந்த நிலையில் உள்ளது எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மாற்று இடமோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ கட்டித்தர விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என ஆய்வு முடித்த பின் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்  தெரிவித்தார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad