நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அக்ரஹாரம் பகுதிகளில். போர் பைப்புகளில் இருந்து நீர் கசிவதால் பயணியர் நிழல் கூடம். அருகில்தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இதில் பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பைப்புகளில் இருந்து தண்ணீர் கசிவதால் ரோட்டோரங்களில் தண்ணீர் ஓடுகிறது.

அது மட்டும் இல்லாமல் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் பைப்லைன் தண்ணீர் திறப்பதற்கான வாழ்வு பகுதி காங்கிரீட் சுற்று சுவர்வைக்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் அப்படியே உள்ளது மழைக்காலங்கள் நெருங்கிவிட்டது தோண்டப்பட்ட குழிகள் ஸ்லாப் கற்கள் வைத்து மூடப்படாமல் உள்ளது குழந்தைகள் அருகே விளையாடுகின்றன சமீபத்தில் சென்னையில் மழை பெய்து மூடப்படாத குழிக்குள் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
அது போன்று விபரீதம் நடப்பதற்கு முன் ஸ்லாப்வைத்து. குழிகளை விரைந்து மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. விரைந்து பணிகளை முன்னெடுக்குமா நகராட்சி நிர்வாகம்??.
- நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.
No comments:
Post a Comment