தண்ணீர் இன்றி பயணிகள் தவிப்பு - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 October 2022

தண்ணீர் இன்றி பயணிகள் தவிப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ரூ.65 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நவீன இருக்கை மற்றும் மின் வசதிகள் அடங்கிய பெரிய இருநிலக்கூடம் ஆகியவை மேம்பால பணிக்காக அகற்றப்பட்டன தினமும் பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர் மற்றும் வேலைக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.


தற்போது குடிநீர் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் தாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர் எனவே பயணிகளின் தாகம் தீர்க்க பஸ்டாண்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி 

No comments:

Post a Comment

Post Top Ad