வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி - கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 October 2022

வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி - கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்.

வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி கலெக்டர் சுரேஷ் தகவல் நாமக்கல் மாவட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.


நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022 -23ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்து  செயல்படுத்தப்பட உள்ளது. 


இதில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம் தரிசு மற்றும் மானவாரி நிலங்களில் உற்பத்தியை பெருக்க வேளாண் பட்டதாரிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் மேலும் விவசாயிகளிடம் இருந்து காய்கறி மற்றும் பழங்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விநியோகிக்கலாம் இந்த திட்டத்தில் பயன் பெற 21 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலையில்லா வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் சிறந்த கணினி புலமையும் வேளாண்மை தொடர்புடைய செயல்களை பயன்படுத்தும் திறனும் உள்ளவராக இருந்தால் வேண்டும். 


விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் விரிவான செயல்திட்ட அறிக்கையை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக அலுவலகத்தை அணுகலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad