அச்சப்பன் கோயிலில் பக்தா்களை சாட்டையால் அடித்து பேயோட்டும் திருவிழா. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 October 2022

அச்சப்பன் கோயிலில் பக்தா்களை சாட்டையால் அடித்து பேயோட்டும் திருவிழா.

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தின்  அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அச்சப்பன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமியன்று திருவிழா நடப்பது வழக்கம். இரு தினங்கள் நடைபெறும் விழாவில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த   குறும்பாடு மேய்க்கும் தொழிலை  செய்து வரும் குறிப்பிட்ட சமுதாய மக்கள் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். 


இதன் முக்கிய அம்சமாக முதல் நாளான்று ‘பேய் விரட்டும்’’ நிகழ்ச்சி நடைபெறும். கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்ட நபரும் பிரம்மாண்டமான ஆளுயர சாட்டையால் அடிப்பா்.


இவ்வாறு பூசாரி அடிப்பதால் உடலில் உள்ள தீய சக்திகள் வெளியேறிவிடும் என்பது இம் மக்களின் நம்பிக்கையாகும். இந்தாண்டுக்கான கோயில் திருவிழா விஜயதசமியான இன்று தொடங்கியது. முதல் நாள் விழாவாக அன்று பிற்பகல் கோயில் வளாகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆண், பெண் பக்தா்கள் தங்களது கைகளை மேலே உயர்த்தி கூப்பியபடி தலைவிரி காலமாக நீண்ட துாரத்திற்கு வரிசையாக மண்டியிட்டிருந்தனா்.


அப்போது காண்போா் மிரளும் வகையிலான ஆளுயர சாட்டையை ஏந்தி வந்த கோயில்  கைகளில்  வாழை மட்டையால் அடித்த பின் பூசாரி பக்தா்களின் சாட்டையை சுழற்றி சுழற்றி அடித்தார் சிலா் ஒரு அடியுடன் எழுந்து சென்றனா். ஒரு சிலா் சாட்டையால் பல அடிகள் வாங்கிய பின்னரே எழுந்து சென்றனா். இது காண்போரை மெய் சிலிா்க்கச் செய்தது. இதைத்தொடா்ந்து பாரம்பரிய சோ்வை நடனம் மற்றும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 


மேலும், சோ்வை நடனத்தின்போது தாளத்திற்கு ஏற்றாற்போல் கோமாளி மற்றும் கோயில் பூசாரியும் நடனமாடியது காண்போரை வெகுவாக ரகிக்கச் செய்தது. மறுநாள் கோயில் வளாகத்தில் கிடா வெட்டு, விருந்தும் நடைபெறும். பல தலைமுறையாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தோா்  தமிழகமெங்கும் வெளிநாடுகளில் இருப்பவர்களும் அந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பங்கேற்றுள்ளனர்.


 -தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி. 

No comments:

Post a Comment

Post Top Ad