காவிரி ஆற்று பாலத்தின் மீது மது போதையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 October 2022

காவிரி ஆற்று பாலத்தின் மீது மது போதையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தின் மீது மது போதையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை சமூக பொறுப்புணர்வுடன் ஊடகவியாளர்கள் தடுத்து நிறுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் பாலத்தின் மீது தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பாலத்தின் மீது தற்கொலைகளை தடுக்கும் வகையில் தன்னம்பிக்கை கொண்ட வாசகங்கள் கொண்டு விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தவர் நிலையில் திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளிபாளையம் தேவாங்குபுறம் பகுதி சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மது போதையில் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார் அப்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புடன் உணர்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரை பிடித்து கீழே இறக்கி பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் பள்ளிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார்  அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


இருப்பினும் அதை உணராத கூலி தொழிலாளி ராஜா தன்னை தற்கொலை செய்து கொள்ள வழிவிடுமாறு தொடர்ந்து காவல்துறையினரை வலியுறுத்தினார் இதன் பின்னர் அவரது இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றுக் கொண்டு சென்ற போலீசார் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் சமாதானம் செய்து வைத்து திரும்பிச் சென்றனர். தற்கொலை சம்பவங்களை அதிகரித்து வருவதால் சமூகப் பொறுப்புடன் காவல்துறையினர் பாலத்தின் மீது விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர் மேலும் தற்கொலை செய்ய முயன்ற நபரை ஊடகையாளர்கள் காப்பாற்றியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.


- தமிழக குரல் நாமக்கல் செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad