அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து தவறான தகவல் பரப்பியவர்களின் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும், மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி பேட்டி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 October 2022

அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து தவறான தகவல் பரப்பியவர்களின் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும், மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி பேட்டி.


நாமக்கல்லில் நேற்று பாஜக மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது கோர்ட் உத்தரவை செயல்படுத்துவது ஒரு அரசின் கடமையாகும் ஆனால் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்தஐ கோர்ட் அனுமதி அளித்த பிறகும் தமிழக அரசு ஊர்வலத்திற்கு தடை விதித்தது. சட்டத்திற்கு முரணானது திமுக கூட்டணி கட்சியினர் மதநல்லிணத்திற்காக மனித சங்கலியை அறிவித்துள்ளனர். அதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூட்டணி கட்சியினர் ஒத்துக் கொள்கின்றனர்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்கா சுற்றுப்பயணம் தொடர்பாக தவறான தகவலை பரப்பியவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் இந்துமதம் குறித்து தவறாக பேசிய ஆ. ராசா எம்பி மீது தி.மு.க தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முதலமைச்சர். மு க ஸ்டாலின் ஆன்மீகம் குறித்து பேசுவது நகப்பிக்குறிய விஷயமாகும். அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் மத்திய மாநில தேர்தல்கள் ஒன்றாக நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார் உடன்மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் சியாம் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்


-தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அந்தோணி.

No comments:

Post a Comment

Post Top Ad