குமராபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் கிராம சபா கூட்டங்கள். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 October 2022

குமராபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் கிராம சபா கூட்டங்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற விழாவில் என்சிசி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்களை அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் அந்தோணிசாமி வழங்கினார். 


விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசியதாவது. தட்டாங்குட்டை ஊராட்சி சார்பில் சடையம் பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமை வகித்து 22 குடிசை வீடுகளை காங்கிரீட் களாக கட்டித் தருதல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மழை நீர் வீணாகாமல் தடுக்க மணல் மூட்டைகளை வைத்து தடுத்தல் .மலேரியா. டெங்கு நோய்கள் வராமல் தடுக்க வாட்டர் டேங்குகள் மாதம் ஒரு முறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதேபோல் குப்பாண்டம்பாளையம் ஊராட்சி சார்பில் சாணார்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவிஸ் கவிதா தலைமையில் நடைபெற்றது, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad