நாமக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 480 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்களைப் அரசியலின் செய்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து தரைதலத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கையை மனுக்களை பெற்றுக் கொண்டார் கூட்டத்தில் குமராபாளையம் தாலுக்கா அம்மாசிபாளையம் உக்கராயன்பேட்டை கிராமத்தில் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டதை எடுத்து அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வதற்கான ஆணையினை அவரது மகனுக்கும் வரகூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதியில் சமையலர் பணி இடத்திற்கான ஆணையனையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் சிவக்குமார் உதவி கலெக்டர்கள் மஞ்சுளா கௌசல்யா தனி துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் பிரபாகரன் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் அந்தோணி

No comments:
Post a Comment