நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் இடைப்பாடி அவியனுர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 39 கோவையில் இருந்து சேலம் நோக்கி இரும்பு கழிவிலான ஸ்கிராப் லோடு லாரியில் ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10 மணி அளவில் குமராபாளையம் அருகே பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியின் ஓட்டுநர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார் இது பற்றி தகவல் அறிந்த குமாரபாளையம் மீட்பு படையினர் மற்றும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஓட்டுனரை உயிருடன் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த குமாரபாளையம் எஸ்ஐ மலர்விழி மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்ட செய்தியாளர் அந்தோணி.

No comments:
Post a Comment