திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டுக்கான பூமி பூஜை மதுரா செந்தில் பங்கேற்பு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 January 2023

திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டுக்கான பூமி பூஜை மதுரா செந்தில் பங்கேற்பு.


திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் திருச்செங்கோட்டில் முதல்முறையாக மாட்டு இனத்தினை நினைவு கூறும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் நாட்டு மாடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது நடத்தப்பட உள்ளது திருச்செங்கோட்டில் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதற்காக 7 ஏக்கர் நிலம் தூய்மைப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் எம் மதரா செந்தில் கலந்துகொண்டு பணியினை துவக்கி வைத்தார் இது குறித்து திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவையினர் கூறியிருப்பது பொங்கலுக்கு பின் ஜல்லிக்கட்டு நடத்த  முழுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்750 மேற்பட்ட காளைகளும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள உள்ளதாகவும் இதில் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டிகளுக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இதற்கான இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் இடத்தை பார்வையிட்டுள்ளதாகவும் அவருடைய பரிந்துரையின் பேரில் தமிழக அரசின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட உள்ளது என்றும் கூறினார்.


 - செய்தியாளர் அந்தோணி

No comments:

Post a Comment

Post Top Ad