புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்கட் ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே எஸ் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகலைகளை படி சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் இடைநிலை முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுதல் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் இளங்கோ சிவகுமார் ராஜேந்திர பிரசாத் கலைச்செல்வன் அரசு பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment