நாட்டின மீன் குஞ்சுகள் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் இருப்பு செய்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 8 January 2023

நாட்டின மீன் குஞ்சுகள் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் இருப்பு செய்தார்.


நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா சிங் இருப்பு செய்தார், பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிரேய சிங் பேசும்போது தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 40 லட்சம் மீன் குஞ்சுகள் ரூ 1.24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்தலும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாய் என கணிசமாக அதிகரித்திட வேண்டும் என்று நோக்கில் செயல்படுத்தப்படுகிறது, தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின் மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்து பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் உயிரினங்களின் உறிஞ்ச சமநிலையை பாதுகாத்திட முடியும் நாட்டின மீன் வளத்தினை பாதுகாத்திட நாட்டின மீன் குஞ்சுகளை அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேல் கொண்டை .கல்பாசு. இந்தியா பெரு கொண்டைகள் ஆகிய மீன் குஞ்சுகளின் பிழைப்பு திறன் வெகுவாக அதிகரித்து விடும் இத்திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகள் மீன் விரலையாக 80 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் அளவில் வளர்ந்தெடுக்கப்பட்டு காவேரி ஆற்றில் 1.70 லட்சம் மீன் குஞ்சுகள் இன்றைய தினம் இருப்பு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியின் மீன்வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் உதவி இயக்குனர் யுவராஜ் அரசு அலுவலர்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad