நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சார்பாக விவசாயிகளின் வளர்ச்சி குறித்து கோரிக்கை வைத்தார்.

பின்பு குறைதீர்க்கும் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். உடன் மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகர், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவி உள்ளிட்ட நாமக்கல் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்.!
No comments:
Post a Comment