தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலரகள் சங்கத்தின் 30வது புதிய மாவட்ட அமைப்பு கூட்டம் மற்றும் ஒடிசா மாநில ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 4 June 2023

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலரகள் சங்கத்தின் 30வது புதிய மாவட்ட அமைப்பு கூட்டம் மற்றும் ஒடிசா மாநில ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலரகள் சங்கத்தின் முப்பதாவது புதிய மாவட்ட அமைப்பு  கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நில அளவை துறையில் பணியாற்றக்கூடிய களப்பணியாளர்களுக்காக மாவட்டங்கள் தோறும் புதிய மாவட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தி வருவதில் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. 

முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நாளில் அமைக்கப்பட்ட புதிய டிஎன்எஸ்டீஒஏ அமைப்பு கூட்டம் மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் தலைமையில் மாநிலத்துணை தலைவர் காய்த்ரி தேவி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறுவட்ட அளவர் பதவி உயர்வு, சார ஆய்வாளர் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், பெண் பணியாளர்கள் பாதிக்கும் வகையில் அலுவலக நேரங்களுக்குப் பின்பாக ஆய்வு கூட்டங்களோ, கூட்டுக் குழு கூட்டங்களோ நடத்தக் கூடாது, மாதந்தோறும் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும், உதவி இயக்குனர் காலம் முறை கூட்டத்தை நடத்தி களப்பணியாளர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தில் களப்பணியாளர்களை முழுமையாக உட்படுத்தாமல் துணை ஆய்வாளர் வரையில் மட்டும் உட்படுத்த வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
இதில் மாநிலத் துணைத் தலைவர் காயத்ரி, மாநில ஆலோசகரும், ஊட்டி மாவட்ட சங்கத் தலைவருமான ராஜேஷ்குமார் சங்கத்தின் கட்டமைப்பு, சங்கத்தின் மேன்மைகள், சங்கத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த  ஆலோசனைகளை வழங்கினர்.


மேலும் நாமக்கல் மாவட்டத்தின் புதிய தலைவராக குமார், மாவட்ட  செயலாளராக இளவரசன், மாவட்ட பொருளாளராக தீபா,மாவட்டத் துணைத் தலைவர்களாக கோகுல்ராஜ்,வசந்தி, மாவட்ட இணை செயலாளராக  உமாமகேஸ்வரி, கார்த்திகேயன்,மாவட்ட தணிக்கையாளராக செல்வி திவ்யா, மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினராக ஹேமலதா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஒன்றிய தலைவர் நவலடி, மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், இணைச்செயலாளர், நிர்வாகிகள் இணைப்புச் சங்க நிர்வாகிகள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் புதிய நிர்வாகிகள் நன்றி கூறினர். 

No comments:

Post a Comment

Post Top Ad