ராசிபுரம் அருகே ரூ. 10 கோடியில் சாலைகள் அமைக்க பூமி பூஜை ராஜேஷ்குமார் எம்பி தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 14 June 2023

ராசிபுரம் அருகே ரூ. 10 கோடியில் சாலைகள் அமைக்க பூமி பூஜை ராஜேஷ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உள்ள ராசிபுரம் அருகே கட்டண உச்சம்பட்டி ஊராட்சி சேர்ந்த கோரைக்காடு முதல் முத்து காளிப்பட்டி ஊராட்சி வரை தார் சாலை அமைக்கும் பூமி பூஜை வரைகாடு முனியப்பன் கோயில் அருகில் நடந்தது, இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சிக்கு வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினருமான துரைசாமி மேல்நிலை வகித்தார் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன் வனிதா ஒன்றிய பொறியாளர் பூபதி ஊராட்சி மன்ற தலைவர் தங்கத்துரை முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் விஜயபாஸ்கர் வெண்ணந்தூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரவீந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அதேபோல் அத்திப்பழக்கம் நூர் அருந்ததியர் தெருவில் ரூபாய் 3 லட்சத்து 5000 மதிப்பில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்து களாங்குளம் ஊராட்சியில் சாலை புதுப்பாளையம் ஊராட்சிகளில் சாலை அமைக்க நடைபெற்ற பூமி பூஜை விழாவிலும் ராஜேஷ் குமார் என்பி பங்கேற்று பணி தொடங்கி வைத்தார்

No comments:

Post a Comment

Post Top Ad