நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 14 June 2023

நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு.


நாமக்கல் மாவட்டம் பூமாலை வணிக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அங்கு செயல்படும் மகளிர் சேவை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார் மேலும் பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள மொத்த கடைகளின் எண்ணிக்கை அதன் வாடகை கட்டண விபரங்கள் கடை ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறையில் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து புதன் சந்தை அருகில் செயல்பட்டு வரும் மைனா மலை உழவர் அங்காடியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது இந்நிறுவனத்தின் பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறித்தும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உதவித் தொகை விபரம் இந்நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய் தயாரிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார் பின்னர் சிங்களாந்தபுரம் ஊராட்சி எம்ஜிஆர் காலணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 9.50 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது கலெக்டர் நேரில் பார்வையிட்டு இதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் இனிப்புகளின் எண்ணிக்கை பயன் பெறும் குடியிருப்புகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களிலும் கேட்டு அறிந்தார்.


மேலும் பொது மக்களிடம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறதா எனவும் கேட்டறிந்தார் ராசிபுரம் தாலுக்கா பெருமாள் உடனடியாக முடிக்கவும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவு இருக்கிறார் உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனம் சிங்களந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad