2 மூதாட்டிகளை கொன்றது ஏன்? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 12 June 2023

2 மூதாட்டிகளை கொன்றது ஏன்? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்.


பள்ளிபாளையம் அருகே 2 மூதாட்டிகள் கொலை வழக்கில் கைதான கூலித் தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார், பள்ளிபாளையம் அருகே ஓடைப்பள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 78 வயது உடைய மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி கடச்சநல்லூர் அருகே பில்லுமடை கார்டு பகுதியில் 64 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார் இந்த இரண்டு கொலைகள் தொடர்பாக திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.


இந்த நிலையில் நேற்று முன் தினம் தனிப்படை போலீசார் தாஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர் அப்போது அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வம் வயது (32) என்பதும் மூதாட்டிகள் கொலை செய்ததும் தெரிய வந்தது இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: ஜலகண்ட புரத்தை சேர்ந்த நான் கூலி வேலை செய்து வந்தேன் எனது உறவினர் ஓட பள்ளி அருகே இருப்பதால் அங்கு அடிக்கடி சென்று வருவேன் அப்பகுதியில் விவசாய கூலி வேலை கிடைத்தால் செய்து விட்டு அங்கேயே தங்கிக் கொள்வேன் இந்த நிலையில் உறவினர் வீட்டு அருகே ஒரு கோழியை திருடியதால் அவர்கள் என்னை துரத்தி விட்டனர்.


கடந்த மார்ச் மாதம் ஓட பள்ளி அருகே சென்று கொண்டிருக்கும் போது விவசாயக்காட்டில் 78 வயது மூதாட்டி ஒருவர் தனியாக இருப்பதை பார்த்தேன் போதையில் இருந்ததால் அவரை கற்பழிக்கும் முயற்சி செய்தேன் பின்னர் அவர் சத்தம் போடுதே அங்கிருந்து கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தேன் பின்னர் அவரது கழுத்தில் இருந்த நகையை அறுத்துக் கொண்டு காவிரி ஆற்றில் குளித்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ஜலகண்டபுரத்துக்கு வந்து விட்டேன் இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காட்டச்சநல்லூர் அருகே பில்லுமடை காடு பகுதியில் வேலைக்கு சென்று வந்துள்ளேன் இந்த நிலையில் கடந்த மாதம் அந்தப் பகுதிக்கு நான் மீண்டும் வேலைக்கு சென்ற போது அங்கு தனியாக வசித்து வந்த 64 வயது மூதாட்டி இடம் பேச்சு கொடுத்தேன் அப்போது அவரிடம் நைசாக பேசி கற்பழித்து விட்டு அங்கிருந்து கல்லால் தலையை மற்றும் முகத்தில் தாக்கி அடித்துக்கொண்டு பின்னர் அவர்கள் காதில் இருந்த தோடுகளை பறித்துக் கொண்டு ஜலகண்டாபுரத்துக்கு சென்று விட்டேன்.


இந்த நிலையில் தலைமறைவாக இருந்த என்னை போலீசார் கைது செய்தனர் இவ்வாறு அவர் போலீசில் கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad