அமைச்சர் மதிவேந்தன் மதுரா செந்தில் முன்னிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழா அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 9 June 2023

அமைச்சர் மதிவேந்தன் மதுரா செந்தில் முன்னிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் திறப்பு விழா அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.


நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகம் திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள மலை காவலர் கோவில் எதிரே மாவட்ட திமுக அலுவலகம் தளபதியார் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவருமான எஸ் எம் மதுரா செந்தில் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன் முன்னிலை வகித்தார்.


விழாவில் திமுக முதன்மைச் செயலாளரும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கலந்து கொண்டு மாவட்ட அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதை தொடர்ந்து மாவட்ட திமுக அலுவலகம் தளபதியார் திடலில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பள்ளிகளை மேற்கொள்ள மாவட்ட திமுக செயலாளர் எஸ் எம் மதுரா செந்தில் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசியல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளையும் வெல்வது எளிது மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களிடம் கனிவாக பேசி அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு கோபப்படாமல் பேசி முடிந்ததை செய்து கொடுத்தால் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறலாம் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசை குறை கூறி பேசி வருகிறார்.


தமிழகத்தில் உள்ள கூட்டமைப்பை வசதி சரியில்லை என்று கூறி வருகிறார் ஆனால் தமிழகத்தை போல் வட மாநிலங்கள் வளர்ச்சி அடைய இன்னும் 50 ஆண்டுகளாகும் என கூறினார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் டி எம் செல்வகணபதி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தங்கவேல் நகர் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad