ராசிபுரத்தில் சரக்கு வாகனத்தை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 16 June 2023

ராசிபுரத்தில் சரக்கு வாகனத்தை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராசிபுரத்தில் சரக்கு வாகனத்தை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி இவர் சொந்தமாக சரக்கு வாகன மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறார் சம்பவத்தன்று இரவு புதிய பஸ் நிலையம் பகுதிகளில் வழக்கம்போல் அவரது சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதைப்பற்றி அவர் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் இது பற்றி ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் ராசிபுரத்தை சேர்ந்த மெக்கானிக் சந்திரகாந்தன் வயது 28 அவரது மனைவியின் தம்பி சுரேஷ் வயசு 25 இருவரும் சேர்ந்து சரக்கு வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது இதை ஒட்டி அவர்கள் இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்த திருடப்பட்ட சரக்கு வாகனத்தை போலீசார் மீட்டனர் கைது செய்யப்பட்ட சந்தரகாந்தன். சுரேஷ் ஆகிய இருவரையும் கோர்ட்டில் ஆச்சரியப்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad