வலையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.96 பேர் கைது. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 6 June 2023

வலையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.96 பேர் கைது.


வலையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகை இட்ட 96 பேரை போலீசார் கைது செய்தனர் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி அரூர் ஆண்டபுரம் பரணி புதுப்பட்டி லத்துவாடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் தமிழக அரசின் தொழில் துறை மூலம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக அப்பகுதியில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிப்காட் தொழிற்பேட்டை நிலம் கைய படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களை பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படும் மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை ரத்து செய்ய கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடக் கோரி விவசாய முன்னேற்ற கழகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்  தொடர்ந்து வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகனூர் போலீசார் 96 பேர் மீது வழக்குப் பதித்து கைது செய்து வளையப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர் கைது செய்யப்பட்டவர்களை விவசாய முன்னேற்றக் கழக நிறுவன ராசாமணி கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தித்தனர். 


இதில் விவசாயிகள் மாவட்ட நிர்வாகிகள் ஜோதி. சதாசிவம் .பூபதி வேலாயுதம் செல்வராஜ் ராஜேந்திரன். தங்க ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாலையில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad