கடன் தொல்லையால் விபரீத முடிவு; தாய் தந்தையுடன் தொழிலாளி தற்கொலை. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 7 June 2023

கடன் தொல்லையால் விபரீத முடிவு; தாய் தந்தையுடன் தொழிலாளி தற்கொலை.


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் அருகே கடன் தொல்லையால் தாய் தந்தையுடன் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது நாமக்கல் மாவட்ட எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பம்பாளையம் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த நடேசன் வயசு 65 இவரது மனைவி சிந்தாமணி இவர்களது மகன் நந்தகுமார் வயசு 36 டச்சு தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகவில்லை.

நடேசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தில் இடுப்பு மற்றும் இரண்டு கால்களிலும் அடிபட்டு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் வேலை செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தார் எனவே நந்தகுமார் கட்சி தொழில் செய்து பெற்றோரின் மருத்துவ செலவு செய்யும் உணவு தேவைகளையும் கவனித்து வந்துள்ளார் வறுமையின் காரணமாக செலவுகளை சமாளிக்க நந்தகுமார் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது இதே போல மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் கடன் வாங்கி உள்ளனர் இவ்வாறு பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மணம் உடைந்த நிலையில் அவர்கள் காணப்பட்டனர்.


நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர் அப்பொழுது மூணு பேரும் தூக்கில் பணமாக தூங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து எழுச்சி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்ட மூணு பேரில் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இதற்கு இடையே மூணு பேரும் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் போலீசார் சோதனை செய்தனர் அப்போது அங்கிருந்த சிந்தாமணி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது அதில் கணவர் நடேசன் மகன் நந்தகுமார் ஆகியோரின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அதிக அளவில் கடன் வாங்கி வேண்டியதாகிவிட்டது மேலும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தங்களது மகன் ஜெயப்பிரகாஷ் புதைக்கப்பட்ட இடத்தில் எங்களது உடல்களையும் புதைக்க வேண்டும் எனவும் எழுதி இருந்தது.


இறந்து போன நடேசன் சிந்தாமணி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்து உள்ளனர் இறந்து போன நந்தகுமார் மூத்த மகன் ஆவார் இரண்டாவது மகன் ஜெயபிரகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் இதே போல இவர்களது ஒரே மகள் சசிரேகா பத்தாண்டுகளுக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது கடைசி மகன் கோபி திண்டுக்கல் தங்கி வேலை செய்து வருகிறார் இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருச்செங்கோடு துணை போலி சூப்பிரண்டு இமயவர்மன் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடன் தொல்லையால் தாய் தந்தையுடன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வையப்பமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad