

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தெரிவித்ததாவது நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 26 தனியார் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது 2022 2023 ஆம் ஆண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார் மேலும் பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து எளிதில் அறியும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1 800 4253 993 என்னுடன் கூடிய விளம்பர பதவிகளை மருத்துவமனையின் முகப்பு பகுதிகளில் வைக்க வேண்டும் என மருத்துவ காப்பீட்டு திட்ட செயல் படுத்தப்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகமாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இதில் ஏதேனும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு குறைகள் இருப்பின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள whatsapp செயலில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் அவ்வாறு தெரிவிக்கப்பட்ட குறைகளை மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment