அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட குட்டை முக்கு என்ற பகுதி அருகே நீர்வழிப் பாதையை ஒரு சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். இதனால் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு, அந்த பகுதியில் வணிக கட்டிடங்களின் கடை விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு, அந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் நீர்வழிப் பாதையை மீட்டு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் பொழுது பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மாவட்ட அமைப்பு செயலாளர் க.உமா சங்கர்,நகரத் தலைவர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் கராத்தே என்.சேகர்,நகர இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட விளையாட்டு குழு செயலாளர் ஆர்.சி.முருகேசன், சரவணன்,லேத் சரவணண், ராஜசேகர், பாஸ்கரன், மற்றும் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment