பள்ளிபாளையம் அருகே ஓடையை ஆக்கிரமித்து கட்டியவர் சுவர் அகற்றம். - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

பள்ளிபாளையம் அருகே ஓடையை ஆக்கிரமித்து கட்டியவர் சுவர் அகற்றம்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அலமேட்டில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர் பள்ளிபாளையம் ஆலம்பாளையம் பேரூராட்சி அளமேடு பகுதியில் மழை நீர் ஓடையில் அப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சென்றது ஓடையை ஒட்டி விவசாயம் செய்து வந்த ஒருவர் ஓடையில் 40 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டி கழிவுநீர் வெளியேறாமல் தடுத்துவிட்டார்.

இதனால் அலமேடு பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆலம்பாளையம் பேரூராட்சி கூட்டத்தில் அப்போதைய தலைவர் P.T. தனகோபால் தீர்மானம் நிறைவேற்றி கழிவுநீர் கால் வாயை மீட்கும்படி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார் ஆனால் சுற்று சுவர் கட்டியவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை ஆட்சி மாற்றத்துக்கு பின் தற்போது அலமேடு கவுன்சிலர் சதீஷ் தனகோபால் நீதிமன்றம் உத்தரவிட்டு எட்டு ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் அமல்படுத்தாதது குறித்து கலெக்டர் உமாவிடம் புகார் தெரிவித்தார்.


இதை அடுத்து கலெக்டர் வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார் ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை இதை அடுத்துநேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கவுன்சிலர் சதீஷ் தனகோபால் கலெக்டரிடம் புகார் செய்தார் இதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார் நேற்று அலமேடு பகுதிக்கு வந்த குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல். ஆர் ஐ கிருத்திகா .மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு சுவற்றை உடைத்து அப்புறப்படுத்தி ஓடையை மீட்டனர்.


மேலும் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள 40 சென்ட் அரசு நிலத்திற்கு கம்பி வேலி அமைக்கவும் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கவும் அதிகாரியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் 20 வருட பிரச்சனை தீர்க்க பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியை அடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad