ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் குற்றவாளி கூண்டில் ஏறுவார் நாமக்கல்லில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி. - தமிழக குரல் - நாமக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 July 2023

ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் குற்றவாளி கூண்டில் ஏறுவார் நாமக்கல்லில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி.


பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, காவிரி தண்ணீரை வழங்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்பது கண்டிக்கத்தக்கது முதலமைச்சருக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை அவரது கட்சியினர் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிப்பதற்காக கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளலாம் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க முடியாது என மத்திய நீர்வளத்துறை மந்திரி நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலினை கண்டித்தும் அவர் பதவி விலக வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் வருகிற 23ஆம் தேதி தமிழக முழுவதும் ஊராட்சி வாரியாகவும் நகராட்சிகளில் வார்டு வாரியாகவும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு சாதகமாக அமையும் என முதலமைச்சர் சொல்வதில் இருந்து அவர் மிகுந்த பயத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றவாளி கூண்டில் நின்றே தீர வேண்டும் தப்பிக்கவே முடியாது நாங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்பதை அறிவித்து வருகிறோம் ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட கூற முடியாத நிலையில் உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார் அவருடன் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் சத்தியமூர்த்தி ராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad