மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி முன்னாள் முதலமைச்சர் அண்ணா கடந்த 1967 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிட்டார் இந்த நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை பதினெட்டாம் தேதி தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது கலெக்டர் உமா தலைமை தாங்கினார், ராமலிங்கம் எம்எல்ஏ முன்னாள் முன்னிலை வகித்தார், கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியாசித்து தொடங்கி வைத்தார், நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிலையம் வழியாக குளக்கரை திடலை வந்தடைந்தது 300-க்கும் மேற்பட்ட மானமானவியல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர், தொடர்ந்து நாமக்கல் நகராட்சி குளக்கரை திடலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி ராஜேஷ் குமார் என்பி திறந்து வைத்து பார்வையிட்டார்.
No comments:
Post a Comment