ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பள்ளிபாளையம் வட்டாரம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, பள்ளிபாளையம் பெரிய காடு தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யப்பட்டது.. இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த காய்கறிகள் மற்றும் பழங்கள் பார்வைக்கு அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், திமுக நகரச் செயலாளர் குமார் ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பெண்களுக்கு வளைகாப்பு செய்தனர். நிகழ்வை அடுத்து ஐந்து வகையான உணவுகளை நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கி, கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு குழந்தை பேறு பெற வேண்டும் என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புனிதவதி, மேற்பார்வையாளர்கள் சொர்ணம், தங்கமணி, லூர்து மேரி, செல்வி, ராசாத்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என பலர் நிகழ்வின் போது உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment