விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல் துறையிடம் மனு கொடுத்தனர். திருச்செங்கோட்டில் நகர செயலாளர் சக்தி பரமசிவம் தலைமையில் மனு கொடுத்தனர் அதில் கூறி இருப்பதாவது: கொங்கு வேளாளர் தேர்தல் நடைபெற்றது ராயல் செந்தில் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் அவர் சங்க உறுப்பினர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் அதில் சங்க உறுப்பினர்கள் மேல்PcR வழக்கு வந்தால் உயர்நீதிமன்றத்தில் இலவசமாக ஜாமின் எடுத்துக் கொடுக்கப்படும் சமுதாயத்தில் வன்கொடுமைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் காணப்படுகிறது.
குற்றங்களை புரிய தூண்டுவதாகவும் அமைந்துள்ளது எனவே அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லிணத்தை சீர்குலைக்கும் வன்முறையை தூண்டு விதமாக உள்ளது எனவே பட்டியலின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராயல்செந்தில் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறுவேண்டும். கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். நகர பொறுப்பாளர் பால் பொன் ரவிச்சந்திரன். நகர துணை செயலாளர் சுகன் பாட்ஷா. பிரகாதீஸ்வரன். ஒன்றிய செயலாளர் குபேந்திரன் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment