நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் (உருது)அப்துல் கலாம் நண்பர்கள் குழுவின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது... நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமை தாங்கினார்,அப்துல் கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்... நிகழ்வில் முதன்மை மருத்துவர் ஜெயந்தி அவர்கள் நோயில்லாமல் வாழ்வதற்கு யோக கலை பயன்படுகிறது என்பதை மாணவ,மாணவிகளிடம் எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் மல்லிகா,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment